குருகுலம் அழகரடிகளார் வாழ்க்கைக் குறிப்புக்கள்

தொகுத்தவர்: திரு. ந.ரா.ஆடலரசு

      பிறந்த ஊர்: மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம்
      ஆண்டு         : 1904 ஏப்ரல்
      பெற்றோர்   : திரு.சுப்பராய பிள்ளை, திரு. மாணிக்கம்மாள்
      மரபு               : வள்ளலாரைத் தோற்றுவித்த ‘சீர் கருணீகர்’

      பெயர்           : பெற்றோரால் அமைந்த பெயர் ‘பாலசுந்தரம்’   ஆசிரியரால் அமைந்த பெயர் இளவழகனார் தீக்கையால் அமைந்த பெயர் அழகரடிகள்
     ஆசிரியர்     : பேராசிரியர் மறைமலை அடிகளார்.
      தீக்கைக்குரவர்: சிவத்திரு. சாமிநாத குருக்கள்

      கல்வி             : மறைமலை அடிகளாரிடம் முறையாகப் பாடம்   கேட்டும் அவர்கள்                                    உதவியுடன் தாமே முயன்றும்  தந்நிகரற்ற தமிழ்ப் புலமை பெற்றார்.

      செயல்           : சங்ககாலச் சான்றோர்களைப்போல் அறங்கரைநாவினர்

தொண்டுகள்

1920
பாலசுந்தரம்- அழகரடிகள்

16-ஆம் வயதில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார்க்கு மாணவர்.

1922-23
Expanded
19- ம் வயதின்

தமது 19-ஆம் அகவையின் முற்பகுதியிலேயே
"'மாமாமா மாமாமா' என்னும் அருட்பாவுக்குப் புதிதாக இயற்றிய உரை; 19- ம் வயதின் பிற்பகுதியில் சுகவனம் சிவப்பிரகாசர் எழுதிய 'குட்டிக் குறள்' என்னும் திருக்குறள் நூற்பாவின் முதல் நூற்பவுக்கு 60 பக்கம் எழுதிய விளக்கப் பேருரை; இது
இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

1923-24
20-வது வயதில்

20-வது வயதில் தம் ஆசிரியர் மறைமலை
அடிகள் எழுதிய 'திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை' க்கு 300 பக்கங்களுக்கு மேல் எழுதிய விளக்கவுரை.

1925
21-வது வயதில் திருமணம்

21-வது வயதில் திருமணம்; துணைவியார் திரு. தங்கம்மாள்.

1925-26
வகுப்புகள்

பலர்க்குத் தமிழ் இலக்கிய, சித்தாந்த சாத்திர வகுப்புகள்
நடத்தினமை.

1927-28
சங்கம்

கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருச்சி சைவ சித்தாந்த சங்கம் முதலிய தமிழகத்துப் பல மாவட்டங்களின் பேரவைகளில், சிலப்பதிகாரம்' திருவாசகம்' முதலியவற்றின்மேல் நிகழ்த்திய விரிவுரைகள்.

1927-30
சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் புலவர்.

1930-31
கழகத் தொண்டுகள்

மறைமலை அடிகளாரது பொதுநிலைக் கழகத் தொண்டுகள்.

1932-33
நூல்கள் வெளியிட்டமை

தனி அச்சகம் நிறுவி 'முல்லைக் கொடி' என்னும் பிறை இதழ்
வெளியீடு. இராமலிங்க அடிகள் வரலாறும் திரு அருட்பா
ஆராய்ச்சியும் முதலிய நூல்கள் வெளியிட்டமை.

1934-35
30-ம் ஆண்டளவையில்

தமது 30-ம் ஆண்டளவையில் அகத்துறவும் அறவுரைகளும்,
சென்னையில் தமிழ் வகுப்புகளும், சிவ சமய விரிவுரைகளும்,
சீவகாருணியச் சொற்பொழிவுகளும்; மகாவீரர் வரலாறு
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு; சீவ காருணியப்
பாடல் திரட்டு 'தென்னிந்திய ஜீவரக்ஷா சபை' வெளியீடு. 'ஏன் புலால் மறுத்தல்வேண்டும்?' சென்னை, புலால் மறுத்தல் சங்கம்
வெளியீடு நீல கேசிப் பதிப்பு.

1935-36
வாலாஜாபாத்தில்

வாலாஜாபாத்தில் ஆசிரியர்களுக்குச் சைவ சித்தாந்தத் தேர்வுக்குரிய, சித்தாந்த வகுப்புகள் நடத்தினமை. மாணவர்,
மாநிலத்தில் முதல்வராகத் தேறினர்.

1936-37
தவம்

திருவண்ணாமலை இரமணாச்சிரமத்தில் தவம்.

1938-39
தவம்-முன்னுரை-நூல்கள் அருளினமை

பழைய சீவரத்தை அடுத்த பாலியாற்றின் கரைமருங்கு 'பிணாவூர்'
மலைமேல் தவம் 'கலித்தொகைக்கு உரை விளக்கம், முன்னுரை';
அகத்திணை இயல் விளக்கம்' முதலிய நூல்கள் அருளினமை.

1940
திருக்குறள் வகுப்புகள்

ஞாயிறுதோறும் சென்னையில் திருவள்ளுவர்
தொண்டர் படையினர்க்குத் திருக்குறள் வகுப்புகள்.

1940-42
கழகப்புலவர்-முதலிய நூல்கள்; எழுத்துக்கள்.

மீண்டும் கழகப்புலவர். 'தொல்காப்பியம் குறிப்புரை' 'ஔளவையார் திருவுள்ளம்' 'அதிவீரராமர் அறநெறி' 'சிவப்பிரகாசர் செந்நெறி' 'ஜினோவா வீரன்' 'சங்க இலக்கிய இன்கவித் திரட்டு' 3 பகுதி, 'சங்க நூற் கட்டுரைகள்' 2 பகுதி, முதலிய நூல்கள்; எழுத்துக்கள். 
திருப்பனந்தாள் ஆதீனத்தில் அருட்டிரு. சாமிதாத தம்பிரான்
அவர்கள் வரவேற்பும், நூல்நிலையத்துக்குரிய உதவிகளும்.

1942-43
பட்டமும்-பரிசும்

சென்னைச் சிவனடியார் திருக்கூட்டச் சார்பில் 'சிவஞான போத'
விரிவுரை; 'சிவநெறிச் செஞ்சொற்கொண்டல்' என்னும் பட்டமும்,
1,000 வெண்பொன் பரிசும் பெற்றமை.

1944-45
19 ஆண்டுகளாகத் திருமுறைப் பெருவிழா

திருக்கூட்டச் சார்பில் கிழமைதோறும் மோனமும் நோன்பும்
இருந்து நடத்திய 'திருமந்திர' விரிவுரை; அதன் நிறைவு விழா,

திருவாவடுதுறையில் 20-ம் பட்டம் அம்பலவாண பண்டார
சந்நிதிகள் ஆதரவில் திருமூலர் முன்னிலையில் நிகழ்ந்தது
'திருமந்திரப் பேராசிரியர் என்னும் பட்டம் பெற்றமை.
திருக்கூட்டத்தார் வழங்கிய 10,000 வெண்பொன் பரிசு.
இடையே, சூளை சமரச சன்மார்க்கச் சங்கச் சார்பில் 'அருட்பெருஞ்சோதி அகவல்' விரிவுரை. திரு. வி. ஜி. பத்மாவதி
யம்மையார் 1,000 வெண்பொன் காணிக்கை. முதல திருக்கூட்டச் சார்பில் ஆனி மகந்தோறும் திருக்கழுக்குன்றத்தில் தொடர்ந்து 19 ஆண்டுகளாகத் திருமுறைப் பெருவிழா.

1949
பட்டம் வழங்கினமை

மாம்பாக்கத்தில் குருகுலம் திறப்பு விழா, தமிழகத்தின் முன்னாள்
முதலமைச்சர் ஒ.பி. இராமசாமி ரெட்டியார். திருவாளர்கள் திரு.
வி. க .. டாக்டர் ரா. பி. சே .. கல்கி, தமிழரசின் அமைச்சர்கள்
முதலியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தமை.
தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் சார்பில் சித்தாந்தப்
பேராசிரியர் சிவகுருநாதர் 'சித்தாந்தச் செஞ்ஞாயிறு' என்னும்
பட்டம் வழங்கினமை.

1950-62
12 ஆண்டுகள்

சென்னை இறைபணி மன்றச் சார்பில் 12 ஆண்டுகள் 'பெரிய
புராண' விரிவுரை. சமஸ்க்ருத 'ஸ்ரீருத்ரம்' தமிழாக்க வெளியீடு.

1950-57
பட்டமும்-தலைமாலைகளும்

ஆண்டுதோறும் தமிழகம் முழுவதுமுள்ள எல்லாப் பாடல் தலங்களுக்கும் பகுதி பகுதியாக நூற்றுக் கணக்கான
அன்பர்களுடன் சென்று தொடர்ந்து வழிபட்டமை. தருமை
ஆதீனம், பொன்னாடையும் பொற்பூக்களோடு கூடிய செபமாலையும் வழங்கியருளல்; திருப்பனந்தாள் ஆதீனம்
வழங்கியருளிய வெண்பொன் பரிசு 100. மதுரை ஆதீனம் வழங்கியருளிய 'சைவப் பெரும் பேராசிரியர்' (சைவ மகா
மகோபாத்தியாய) என்னும் பட்டமும் செபமாலை, தலைமாலைகளும்.

1953
கந்தரநுபூதி

கந்தரநுபூதி மந்திர விளக்கம். இதற்குப் வெண்பொன் பேரவையினர் காணிக்கை 3,000 வெண்பொன் மயிலாப்பூர்த் திருவள்ளுவர் கோயிலில் தவம். தமிழ்க் கலைக்களஞ்சியத்திற்குத் திருமந்திரக் கட்டுரை.

1954-55
வழிபாடும்-திருக்குறள் பெருவிழா

இராஜாஜி தொடங்கி வைக்கச் சென்னை பேட்டைகளில்
ஞாயிறுதோறும் வழிபாடும், திருக்குறள் சொற்பொழிவுகளும். 10
நாள் சென்னையில் திருக்குறள் பெருவிழா நடத்தினமை; அன்றாடம் பெருமக்கள் பலர் கலந்துகொண்டமை; கடைசி நாள்
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கூட்டம்; கல்வி, நிதி அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும், திரு.'கல்கி' அவர்களும் வருகைபுரிந்து சிறப்பித்தமை. திரு. டி. கோவிந்தராஜுலு நாயுடு
அவர்கள் வெண்பொன் 100 காணிக்கை.
திருவாவடுதுறை ஆதீனத்தின் திருமந்திர மாநாட்டில் 2-நாள்
திருமந்திர விரிவுரை; மகா சந்நிதானம் அவர்கள் பாராட்டும்
வெண்பொன் 600 பரிசும்.

1955
இல்லம் தொடக்கம்

குருகுலத்தில் மாணவர் இல்லம் தொடக்கம். கோவைத் தமிழ்ச் சங்கச் சார்பில் சர். ஆர். கே. எஸ்., திரு. சி. எம். ஆர், ஆகியவர்கள் வரவேற்பும், விருந்தும். 'சங்க நூற் பெரும் புலவர்' என்னும் பட்டம்,
வெண்பொன் 100 காணிக்கை முதலியன பெற்றமை.

1955
மைசூர் மன்னர்

மைசூர் மன்னர் திருவோலக்கத்தில் கலந்துகொண்டமை. மன்னர் அறிமுகம்.

1957-58
வடநாட்டுப் பயணம்

வடநாட்டுப் பயணம்: புவனேசுவரம், பூரி, கல்கத்தா, பேலூர்,
தக்ஷிணேசுவரம், கயா, காசி முதலிய தலங்கள் பம்பாயில் பேட்டை தோறும் விரிவுரைகள். கன்னட நாட்டுப் பயணமும் 'கோகர்ணம்' வழிபாடும்; ஆந்திர நாட்டு உலாவும் 'ஸ்ரீசைலம்' வழிபாடும்.

1958-59
சிவஞான சித்தியார்

சிவனடியார் திருக்கூட்டச் சார்பில் "சிவஞான சித்தியார்" விரிவுரை.

1959
பள்ளி அமைந்தமை

குருகுலத்தில் உயர்நிலைப் பள்ளி அமைந்தமை.

1960
14 நாள் மெய்யுணர்வு விழா

மெய்கண்ட நூல்கள் பதினான்கையும் பல ஆண்டுகளாய்ப் பாடம்
சொல்லி நிறை வேற்றியதை ஒட்டித் திருக்கூட்டச் சார்பில் நிகழ்த்திய 14 நாள் மெய்யுணர்வு விழா. நிறைவுச் சிவதீக்கையும்
ஆசிரியத் திருமுழுக்கும் பெற்று 'அழகரடிகள்' என்னும் தீக்கை
அருட்பெயருடன் 2-5-60'ல் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சூழத்
திருக்குறள் பீடாதிபதிகள் ஆனமை. குன்றக்குடி அடிகளார் பொன்னாடை போர்த்தல். திரு. கு. அய்யா. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் திருநீற்றுப் பெட்டகப் பரிசு.திருக்கூட்டத்தார்
வழங்கிய 2,000 வெண்பொன் காணிக்கை. காட்டரண்பாக்கம் வழிபாட்டரசி ஜெயலக்ஷ்மி அம்மையார் ஆசிரியர் திருவடி களைச் செம்பொற் காசுகளால் அருச்சித்தமை. சென்னை மாநிலத்தின் ஆளுநர் (கவர்னர்) சந்திப்பும் நல்லுரையும்.

1962
நூலாக வெளியிட்டமை

'திருவள்ளுவ மாலை' விளக்கம் எழுதித் 'தமிழ் மறைச் சிறப்பு'
என்னும் நூலாக வெளியிட்டமை.

1962-63
'திருக்கோவையார்' விரிவுரைகள்

'சிவ அன்பன்' விருப்பத்திற்கேற்ப நூற்றுக்கு மேற்பட்ட 'திருக்கோவையார்' விரிவுரைகள்.

1964
திருக்குறள் அடிகள்

ஏப்ரல் முதல், திருக்கூட்டச் சார்பில் ஒப்பற்ற முறையில் சென்னை மல்லீசர் (பூக்கடை) திருக்கோவிலில் திருக்குறளுக்குப்
புதிய விளக்கங்களை அருள் செய்து வருதல். கவியோகி
சுத்தாநந்தர், 'திருக்குறள் அடிகள்' எனப் பெயர் வழங்கினமை.

1969
பெண்கள் உயர்நிலைப்பள்ளி

குருகுலம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கியமை.

1970
திருக்குறள் பீடம் குருகுலம் பொறுப்பு

திருக்குறள் அறம் என்னும் நூல் எழுதி முடித்தமை.

திருக்குறள் பீடம் குருகுலம் பொறுப்பு (Trust) (கழக மூலம்
வெளியீடு) பதிவுமைத்தமை.

1955-77
குருகுலத்தில் பொதுமறை திங்களிதழ் தொடங்கியமை.

குருகுலத்தில் பொதுமறை திங்களிதழ் தொடங்கியமை.
குருகுலம் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குக் கட்டிடம்
முழுமையாக முடித்து விஞ்ஞானக் கண்காட்சியும் நடத்தியமை.
மெய்கண்ட சாத்திர நூல்கள் அனைத்தும், மறைமலையடிகள்
வரலாற்று மாட்சி நூல் எழுதியமை. திருக்கழுக்குன்றம் நால்வர்
கோவில் திருப்பணி முடித்து நால்வர் பெருமக்கட்கும் அவரவர்
நட்சத்திரங்களில் வியக்கும் வண்ணம் விழா நடத்தியமையும்,
'அப்பர் தொண்டர் அணி' அமைத்து அதன்மூலம் விழா நடக்க
ஏற்பாடு செய்தமை.
குருகுலம் குருபழநி ஆதீனம் திருக்குறள் பீடம் இளவரசராக
திரு. குருபழநி அடிகள் தேர்ந்தெடுத்தமை.

1977-78
ஆய்வு நூல்

'சிவஞான போதம்' ஆய்வு நூல் எழுதியமை.

1979
இளவரசு அபிடேகம்

குருபழநி அவர்கட்கு இளவரசு அபிடேகம் சிறப்பாகச் செய்வித்தமை.
தவத்திரு. ஞானியாரடிகள், மறைமலையடிகள் நினைவுச் சொற்பொழிவு அறக்கட்டளைகள் நிறுவி; வாயிலாகப் பல
சொற்பொழிவு நூல்களை வெளியிட்டமை.

1979
பிப்ரவரி 18-ல்

பிப்ரவரி 18-ல் திருவடிப் பேறு எய்தியமை.
1-3-82 குருகுலம், திருக்குறள் பீடம் இளவரசு திரு. குருபழநி
அவர்கள், சிவத்திரு. குருபழநி அடிகளாக, திருக்குறள் பீடாதிபதிகளாக ஆட்சி ஏற்றமை.